மனைவி, மாமியாருக்குக் கத்திக்குத்து.. குடும்பத் தகராறில் விபரீதம்!

 
கத்திக்குத்து கணவன் மனைவி தம்பதி கொலை இளம்பெண் பாலியல் கத்திக்குத்து கணவன் மனைவி தம்பதி கொலை இளம்பெண் பாலியல்

திருச்சியில் குடும்பத் தகராறில், மனைவியையும், மாமியாரையும் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள உண்ணியூர் பகுதியைச் சேர்ந்த முத்துகோபால் என்பவருக்கும், அவரது மனைவி வினிதா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, வினிதா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள தங்களது நெருங்கிய உறவினர் ஒருவரின் வீட்டுத் துக்க நிகழ்விற்காக வினிதா அங்கு சென்றுள்ளார்.

கத்திக்குத்து

துக்க நிகழ்ச்சிக்கு வந்த வினிதாவை முத்துகோபால் நேரில் சந்தித்து, மீண்டும் தன்னுடன் வீட்டிற்குத் குடும்பம் நடத்த வருமாறு பிடிவாதமாக அழைத்துள்ளார். ஆனால் கணவனுடன் செல்ல வினிதா முற்றிலும் மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த முத்துகோபால், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்துத் தனது மனைவியை கொடூரமான முறையில் குத்தியுள்ளார்.

கத்திக்குத்து

அப்போது அருகில் இருந்து மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து தடுத்து, மகளைக் காப்பாற்ற முயன்ற தனது மாமியாரையும் கத்தியால் கொடூரமாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மடக்கிப் பிடித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முத்துகோபாலை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.