மனைவி மகன் சேர்ந்து தந்தையை கொன்ற கொடூரம்.. விசாரணையில் அதிர்ச்சி..!

 
கணவன் கொலை
மனைவியும் மகனும் சேர்ந்து தந்தையை உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தார் தாலுகா சபுரடோடி கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ் (வயது 45). விவசாயி. இவரது மனைவி சவிதா. இவர்களது மகன் சஷாங்க். இந்த நிலையில் உமேஷ் மற்றும் சவிதா இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவிதாவும், அவரது மகன் சஷாங்கும் உமேசை விட்டு பிரிந்து சென்றனர்.இதனால் சவிதாவும், சஷாங்கும் பெங்களூருவில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சவுதாவும், அவரது மகன் சஷாங்கும் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளனர்.

ಜಗತ್ತು ಮರೆತು ಫೋನ್​ನಲ್ಲಿ ಮಾತನಾಡುತ್ತಿದ್ದವರ ಮೇಲೆ ಹರಿಯಿತು ರೈಲು; ಮಂಡ್ಯದಲ್ಲಿ  ಇಬ್ಬರು ಮಹಿಳೆಯರ ದುರ್ಮರಣ - Two women died after train hit in mandya railway  station ayb au7 Kannada News

பின்னர் அவர்கள் தங்களது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்களை உமேஷ் வீட்டுக்குள் விட மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி, அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் சவிதாவும், சஷாங்கும் உமேசை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த உமேஷ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சவிதாவும், சஷாங்கும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெசாகரஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான உமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Wife, son hack man to death over family dispute in Mandya - Daijiworld.com

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யதீஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திம்மய்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது வீட்டுக்குள் விட மறுத்ததால் மனைவியும், மகனும் சேர்ந்து உமேசை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பெசாகரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சவிதா மற்றும் அவரது மகன் சஷாங்க் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web