உணவு பரிமாறாமல் டான்ஸ் க்ளாஸுக்குப் போன மனைவி அடித்துக் கொலை - கணவன் வெறித்தனம்!

 
கொலை

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், விநாயகர் சதுர்த்தி நடனப் பயிற்சிக்குச் செல்ல முயன்ற மனைவியை, கணவனே தாக்கிப் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரைச் சேர்ந்த கிருஷ்ணலால் (41) - யாமினி தம்பதியினர் வசித்து வந்தனர். விநாயகர் சதுர்த்திப் பண்டிகையின் போது நடனமாடுவதற்காக யாமினி தீவிர பயிற்சி பெற்று வந்தார். சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு அவர் பயிற்சிக்குப் புறப்பட்டபோது, வேலை முடிந்து வந்த கணவர் தனக்கு உணவு பரிமாறுமாறு கேட்டுள்ளார்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

பயிற்சிக்கு நேரமாகி விட்டதாக யாமினி கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணலால் தனது மனைவியை உருட்டுக் கட்டை அல்லது கைகளால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் கழுத்து மற்றும் வயிறு உள்ளிட்ட பலத்த காயமடைந்த யாமினி பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவியின் மரணத்தை இயற்கையானது போல மறைக்க முயன்ற கிருஷ்ணலாலிடம், பெற்றோரின் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைக்குப் பின் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

இளம்பெண் பாலியல் உல்லாசம் பலாத்காரம் காதல் தற்கொலை கொலை

விசாரணையில் மனைதியைக் கொன்றதை ஒப்புக்கொண்ட கிருஷ்ணலால் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு 14 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.