மூத்த மகள் பாலியல் வன்கொடுமை - 2வது கணவரை அடித்தே கொன்ற மனைவி!
கேரள மாநிலம் கொச்சியில் தனது மூத்த மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டாவது கணவரை அடித்துக் கொன்று, உடலை ரயில் தண்டவாளத்தில் வீசிய தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொச்சி ஏலமக்காரா பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒடிசாவைச் சேர்ந்த 42 வயது பெண்மணி ஒருவர், 32 வயது இளைஞரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொச்சியில் வசித்து வந்தது தெரியவந்தது.

அந்நபர், தனது மனைவியின் மூத்த மகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இக்கொடூரச் செயலை அறிந்து ஆத்திரமடைந்த தாய், மதுபோதையில் இருந்த தனது இரண்டாவது கணவரை அடித்துக் கொன்றுள்ளார். பின்னர், அதை விபத்து போலக் காட்டுவதற்காக உடலை ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளார்.
இக்கொலைக்குப் பிறகு தனது இரு மகள்களுடன் ஒடிசாவிற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, அப்பெண்ணைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
