கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி... நடுரோட்டில் இருவரையும் துப்பாக்கியால் சுட்ட கணவன்!

 
கள்ளக்காதல்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே ஃபிரோசாபாத்தில், திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்த மனைவியையும் அவரது ஆண் நண்பரையும் நடுரோட்டில் வைத்து கணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபிரோசாபாத்தில் உள்ள கோட்லா சுங்கி பகுதி டி.ஏ.வி சந்தையில் இரவு 8.30 மணியளவில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கள்ளக்காதல்

ரிஷப் தைலாங் (35) என்பவரின் மனைவி ஷிப்ரா (32). இவர்களுக்கிடையேயான விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். அருகிலுள்ள கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு தனது ஆண் நண்பர் ஜிதேந்திர தாக்கூர் என்பவரின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார் ஷிப்ரா. அவர்கள் ஒன்றாக இருப்பதை அறிந்து பின்தொடர்ந்து வந்த ரிஷப், ஆத்திரமடைந்து தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் இருவரையும் 4 முதல் 5 முறை சரமாரியாகச் சுட்டுள்ளார்.

குண்டு காயங்களுடன் படுகாயமடைந்த ஷிப்ரா மற்றும் சன்னி இருவரும் தீவிர சிகிச்சைக்காக ஆக்ரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே ரிஷப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதோடு, அவரிடமிருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியும் காலி தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.