பகீர்... அம்மிக்கல்லால் அடித்து மனைவியை கொலை செய்த கணவன்!!

 
சேலத்தில் மனைவி கொலை
மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்சாக கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் சின்னசேலம் வட்டம், திம்மாபுரத்தைச் சேர்ந்தவர் தொப்பையன் மூப்பர் மகன் ராமர் (55). இவரது மனைவி சின்னப்பிள்ளை (45). இவர்களுக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். சின்னப்பிள்ளையின் பெற்றோர் பெயரில் உள்ள சுமார் 3 ஏக்கர் நிலத்தைப் பிரித்துக் கொள்வதில் தகராறு இருந்ததாம். இதனால், பல ஆண்டுகளாக சின்னப்பிள்ளை தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்லவில்லையாம்.

கடந்த 17-ஆம் தேதி சின்னப்பிள்ளையின் தாய் செல்லம்மா (80) உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்குச் செல்ல ராமர் அனுமதிக்கவில்லையாம். இதையும் மீறி சின்னப்பிள்ளை அங்கு சென்று வந்ததால், அவர் மீது ராமர் கோபத்தில் இருந்தாராம். ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கிக்
தூக்கி போட்டத்தில் நாகக்குப்பம் கிராமத்தில் உள்ள வீட்டில் சின்னப்பிள்ளை கொண்டிருந்தார். அப்போது, அவர் தலை மீது ராமர் அம்மிக்கல்லைத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸார் சின்னப்பிள்ளையின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராமரை கைது செய்தனர்.