நள்ளிரவு போதையில் தொல்லை தாங்கல... அரிவாளால் கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி... தூங்கி எழுந்த குழந்தைகள் கதறல்!

 
ரம்யா

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொல்லகுப்பம் ஊராட்சி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குமார் (40). இவரது மனைவி ரம்யா (35). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஆம்புலன்ஸ்

நேற்று முன்தினம் நள்ளிரவு போதையில் வீட்டிற்குச் சென்று குமார் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த ரம்யா, வீட்டில் இருந்த அரிவாளால் கணவரைக் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த குமார் பரிதாபமாக உயிரிழந்தார். விடிய விடிய கணவரின் சடலத்தின் அருகே காத்திருந்த ரம்யா, அதிகாலையில் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

தினமும் குடித்துவிட்டுத் தொல்லை செய்ததால் ஆத்திரத்தில் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிந்து ரம்யாவைக் கைது செய்தனர். பெற்றோரை இழந்த குழந்தைகளின் கதறல் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.