தவெக நிர்வாகி மர்ம மரணம் -கள்ளத்தொடர்பைக் கண்டித்த கணவனைக் கொன்றுவிட்டுத் தற்கொலை என நாடகமாடிய மனைவி!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட சம்பவம், விசாரணையில் மனைதியே தீர்த்துக்கட்டிய திடுக்கிடும் உண்மை அம்பலமாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள பகுதியில் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்த சூரியபிரகாஷ் என்பவர் திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி சரண்யா நாடகமாடித் தகவல் பரப்பியுள்ளார்.

சூரியபிரகாஷின் மரணத்தில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவரது உடலில் பலத்த காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் இருப்பது மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது.
மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் சரண்யாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது கள்ளத்தொடர்பைக் கணவர் சூரியபிரகாஷ் கண்டித்ததால் ஆத்திரமடைந்து அவரைக் கொலை செய்ததாக மனைவி சரண்யா ஒப்புக்கொண்டார். கணவரைக் கொன்று விட்டுத் தற்கொலை என நாடகமாடிய சரண்யாவைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
