காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி... 'லைவ் லொகேஷன்' அனுப்பி திட்டம் போட்ட கொடூரம்!

 
கள்ளக்காதல் கொலை

கிருஷ்ணகிரியில் தனது திருமணத்தை மீறிய காதலுக்குத் தடையாக இருந்த கணவரை, கோயிலுக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே திட்டமிட்டுப் படுகொலை செய்த இளம்பெண், தனது காதலனுடன் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர் யாசினி (20). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே குடும்ப வாழ்க்கைச் சென்று கொண்டிருந்த வேளையில், யாசினிக்கு யுகேந்தர் (20) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்தை மீறிய காதலாக மாறியுள்ளது. இவர்களின் இந்த உறவுக்குக் கணவர் கடுமையான முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யாசினி, தனது கணவரைத் தீர்த்துக்கட்டக் காதலனுடன் சேர்ந்து ஒரு பயங்கரத் திட்டத்தைத் தீட்டியுள்ளார். இதன்படி, நேற்று  தனது கணவரைப் பக்கத்தில் உள்ள கோயிலுக்குச் செல்லலாம் என நைசாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

அவர்கள் சென்ற பாதையைத் தனது மொபைல் போன் மூலம் காதலன் யுகேந்தருக்குத் தொடர்ந்து 'லைவ் லொகேஷன்' அமைத்துத் துல்லியமாக அனுப்பிக் கொண்டே இருந்துள்ளார்.  யாசினி அனுப்பிய இருப்பிடத் தகவலைப் பின்தொடர்ந்து, யுகேந்தர் சம்பவ இடத்திற்குத் திட்டமிட்டபடி வந்து சேர்ந்தார்.

ஆள்நடமாட்டம் இல்லாத மறைவிடப் பகுதியில் வைத்து, யாசினி மற்றும் யுகேந்தர் ஆகிய இருவரும் சேர்ந்து கணவரைத் தடுத்து நிறுத்தித் தங்களது கைவசம் வைத்திருந்த ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்தனர். கணவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்ததை உறுதி செய்த பின், யாசினி தனது ஒன்றரை வயதுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, காதலன் யுகேந்தருடன் அங்கிருந்து தப்பியோடினார்.

கள்ளக்காதல்

இப்பகுதியில் ரத்தக் காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பது குறித்துப் பொது மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதனைத் தொடர்ந்து தனிப்படைகள் அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், தப்பியோடிய காதலர் ஜோடியான யாசினி மற்றும் யுகேந்தர் ஆகிய இருவரையும் சில மணி நேரங்களிலேயே மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். கைதான இருவரிடமும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்துப் போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.