கள்ள உறவால் தாம்பத்தியத்திற்கு மறுத்த மனைவி... கணவருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு!

 
விவாகரத்து டைவர்ஸ்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், மற்றொரு நபருடன் தொடர்பில் இருந்து கொண்டு கணவருடன் தாம்பத்திய உறவுக்கு மறுத்த மனைவிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், கணவருக்கு விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழத் தொடங்கினர்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

இந்நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி ஜெய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் தரப்பில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது மனைவி கடந்த 4 ஆண்டுகளாக தன்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட மறுப்பதாகவும், மனரீதியான கடுமையான கொடுமைகளை இழைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

தனது மனைவி மற்றொரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாகவும், 'கர்வா சௌத்' (கணவன் நீண்ட ஆயுளுடன் வாழும் வேண்டிமனைவிகள் விரதம் இருக்கும் நாள்) பண்டிகை நாளில் தனது கணவருக்காக இல்லாமல் அந்த நண்பருக்காக விரதம் இருந்ததாகவும், அவரது பெயரைக் கைகளில் மருதாணியால் எழுதிக் கொண்டதாகவும் கணவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றம் - 2ன் நீதிபதி விஷால் பார்கவா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைையின் போது மனைவியும் தம்பதியினரின் உறவு குறித்த உண்மைகளை ஒப்புக் கொண்டார்.

லிவ் இன் காதல் நீதிமன்றம் காதலர்கள் கள்ளக்காதல் தீர்ப்பு அலகாபாத்

நண்பர் என்று சொல்லிக் கொள்ளும் நபருக்காக 'கர்வா சௌத்' விரதம் இருப்பது மற்றும் அவரது பெயரைக் கைகளில் மருதாணியாக எழுதுவது போன்ற செயல்கள், அந்த நபரை முழுவதுமான கணவராக ஏற்றுக் கொள்வதற்குச் சமம் என்று நீதிபதி தெரிவித்தார். இது மனுதாரரான கணவருக்கு இழைக்கப்பட்ட பெரும் மனரீதியான கொடுமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

விசாரணையின் போது, அந்தப் பெண் தனது கணவருக்குத் தெரியாமல் தனது நண்பருடன் உறவில் இருப்பதாகவும், கோவாவில் வைத்துத் திருமணச் சடங்குகளைச் செய்து கொண்டதாகவும் ஒப்புக்கொண்டார். இதன் மூலம் கணவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் உறுதியாயின.

மற்றொருவரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு கணவரை ஏமாற்றியதும், தாம்பத்திய உறவுக்குத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்ததும் கடுமையான மனரீதியான கொடுமை எனக் கூறிய நீதிபதி, தம்பதியின் 13 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார்.