பர்தா அணிய மறுத்த மனைவி.. விவாகரத்து கேட்ட கணவனை வறுத்தெடுத்த நீதிமன்றம்!

 
பர்தா புர்கா முஸ்லீம்

பர்தா அணியாததால் மனைவிக்கு எதிராக விவாகரத்து கோரி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இது மன ரீதியான கொடுமை எனக் கூறி வழக்குப் பதிவு செய்தார். இதையெல்லாம் மனக் கொடுமையின் அடிப்படையில் சேர்க்க முடியாது.. இதற்கெல்லாம் விவாகரத்து கிடைக்காது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹிஜாப் பர்தா

இந்த வழக்கை நீதிபதிகள் சௌமித்ரா தயாள் சிங், டோனாடி ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பர்தா அணியாமல் மனரீதியாக சித்ரவதை செய்ததாக கணவர் கீழமை நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “நீங்கள் உங்கள் மனைவியை ஒரு பொருளாக நடத்துகிறீர்கள்.  கேட்டால் நீங்கள் அவருக்கு சுதந்திரம் கொடுப்பதாக சொல்றீங்க.

சந்தைக்கும் மற்ற இடங்களுக்கும் தானாக செல்கிறார் என்று கூறுகிறீர்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. பர்தா அணியச் சொன்ன பிறகு எப்படி சுதந்திரம் தருகிறீர்கள் என்ற வாதத்தை முன்வைக்க முடியும்? மனைவியின் சுதந்திரம் அவருடையது. ஒரு  சமூகத்தில், அரசாங்கம் வழங்கிய சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. இது பெண்களுக்கும் கூட. இப்படி நீங்கள் மனைவியை பர்தா அணிய வற்புறுத்துவது தவறு.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

அதுமட்டுமல்லாமல் வேறு காரணங்களுக்காக விவாகரத்து கேட்டிருக்கிறீர்கள். ஒரு பெண்ணின் உடை அவளது சொந்த விருப்பம். அவர் ஒரு சிவில் சமூகத்தின் விதிகளின்படி ஆடை அணியலாம். அப்படித்தான் ஆணும். ஆனால் இதையெல்லாம் வைத்து விவாகரத்து கேட்க முடியாது. இந்த மனுவை ஏற்க முடியாது’’ என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web