கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்ற மனைவி... நடுரோட்டில் கணவன் கொடுத்த அதிர்ச்சி... வைரலாகும் வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதலர் தினத்தன்று தனது மனைவியைக் கள்ளக்காதலனுடன் கையும் களவுமாகப் பிடித்த கணவர், நடுரோட்டிலேயே அவர்களை அடித்துத் துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாப்பூர் மாவட்டத்தின் மீரட் சாலை மேம்பாலம் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு பெண், தனது கணவருக்குத் தெரியாமல் கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அந்த வழியாக வந்த கணவர், தனது மனைவி வேறொரு நபருடன் பைக்கில் நெருக்கமாகச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அந்த பைக்கை வழிமறித்த கணவர், தனது மனைவி மற்றும் அந்த நபரைக் கீழே இறக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரத்தில் கணவர் தனது மனைவியையும், கள்ளக்காதலனையும் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்களும், கணவரின் உறவினர்களும் அந்த நபரைச் சூழ்ந்து கொண்டு தாக்கினர். நடுரோட்டில் நடந்த இந்த மோதலால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் இந்த மோதலைத் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது 'காதலர் தின கலாட்டா' என்ற பெயரில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஹாப்பூர் நகர் கோட்வாலி போலீஸார், மோதலில் ஈடுபட்ட கணவர், மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்துப் பேசிய இன்ஸ்பெக்டர் வினோத் பாண்டே, "பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி கணவர் மற்றும் மனைவியின் கள்ளக்காதலன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டாலும், இந்த விவகாரம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தார். காதலர் தினத்தன்று மனைவியின் 'லவ் ஸ்டோரி' அம்பலமான இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.
Valentine-Day Kalesh (High-voltage drama on Valentine's Day in Hapur Husband caught his wife with lover. Fierce brawl right in the middle of the street. Valentine's Day consequences start rolling in. Watch the video...)pic.twitter.com/92BWjvskeS
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 14, 2026
