திருப்பூரில் மனைவி கழுத்தை அறுத்துக் கொலை -2வது கணவன் வெறிச்செயல்!

 
மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

திருப்பூரில், சுயஉதவிக் குழுவில் வேலை செய்து வந்த விசாலாட்சி (40) என்பவர் தனது இரண்டாவது கணவர் விஜயபாலனால் கத்தியால் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

தூங்கிக் கொண்டிருந்தபோது விசாலாட்சியின் முதல் கணவரின் மகளிடம் விஜயபாலன் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதைக் கண்ட விசாலாட்சி உடனடியாக அவரைத் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த விஜயபாலன், விசாலாட்சியைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இதனைத் தொடர்ந்து, அவர் தனது இரண்டு மகன்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட மகள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய விஜயபாலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.