“மனைவி எல்லாத்திலும் அதிக சுத்தம் எதிர்பார்த்து டார்ச்சர் செய்கிறார்...” ரூ.2.40 கோடி இழப்பீடு கேட்டு கோர்ட் படியேறிய கணவன்!

 
விவாகரத்து

துருக்கியில் கணவன்-மனைவி இடையே நிலவும் விநோதமான மற்றும் விபரீதமான பிரச்சினை காரணமாக, நபர் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளதுடன், மன உளைச்சலுக்கு இழப்பீடாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.40 கோடி கோரியுள்ள சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.

நான்கு ஆண்டுகளாகத் திருமணமாகி வாழ்ந்து வரும் தம்பதியினரில், மனைவியின் அதீத தூய்மை வெறி எல்லையைக் கடந்துள்ளது. கழிவறையைச் சுத்தம் செய்த உடனே அதனை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அவர் கண்டிப்புடன் தடுத்துள்ளார். "இயற்கைக் உபாதைகளைக் கூட அடக்க முடியுமா?" என்று கணவர் தனது மனுவில் வேதனைத் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து

படுக்கையில் கணவரின் தலைமுடி ஒன்று அல்லது இரண்டு விழுந்தாலும் மனைவி கடுமையான கோபமடைந்து சண்டையிட்டுள்ளார். மேலும், சமையலறை அழுக்காகிவிடும் என்பதற்காக வீட்டில் சமையல் செய்வதையே தவிர்த்துவிட்டு, எப்போதும் வெளி உணவுகளையே ஆர்டர் செய்து சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

மனைவியின் இந்த விசித்திரமான மற்றும் கட்டுப்பாடான நடவடிக்கைகளால் தனக்குத் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, விவாகரத்துடன் சேர்த்து 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2.40 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடര്‍ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.