ரூ.20,000 கடனுக்காக தாயும், சிசுவும் உயிரிழப்பதா? - வேல்முருகன் கடும் கண்டனம்!

 
வேல்முருகன்

காஞ்சிபுரத்தில் கடன் தொடர்பான பிரச்னையால் கர்ப்பிணியும் அவரது சிசுவும் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்குக் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது ஆழ்ந்த வேதனையையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

வெறும் 20 ஆயிரம் ரூபாய் கடன் விவகாரத்தில் முறையற்ற கடன் வசூல் முறைகளால் ஒரு தாயும் அவளது பச்சிளம் சிசுவும் உயிரை இழக்க நேரிட்டது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரசவம் கர்ப்பிணி

சிறிய தொகைக் கடனுக்காகக்கூட சாதாரணக் குடும்பங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு இன்னல்களுக்கு ஆளாகும் அவலநிலை தொடர்வதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கத் தமிழக அரசு உடனடியாகத் தகுந்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.