இன்று மாலையில் எகிறிய தங்கம் விலை... நாளை குறையுமா? - நிபுணர்களின் கருத்து!
இன்று காலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்ட நிலையில், இன்று மாலையே தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் குறைய வாய்ப்புள்ளதா அல்லது மேலும் உயர்ந்து அதிர்ச்சியளிக்குமா என்கிற கவலையும் எழுந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.1,920 வரை குறைந்திருந்த நிலையில், இன்று மாலை திடீரென சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 14,155-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையைப் போலவே வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம் சர்வதேச நிலவரப்படி ஈரான் அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையில் நிலையற்ற போக்கு காணப்படுகிறது. அமெரிக்க வங்கி வட்டி விகிதம் இம்மாதம் நிர்ணயிக்கப்பட உள்ளதால், தங்கத்தின் விலையில் தற்போது ஒரு இறக்கமும், அதன் பின்னர் தொடர்ந்து உயரவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
