தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று நியூசிலாந்துடன் 5வது ஒருநாள் போட்டி.. இந்திய அணி முதலில் பேட்டிங்!

 
நியூசிலாந்து கிரிக்கெட்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்த நாட்டுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

டி20 கிரிக்கெட் நியூசிலாந்து

இந்நிலையில், தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி டொராங்காவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

நியூசிலாந்து

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, கடந்த போட்டியில் ஏற்பட்ட பேட்டிங் சரிவிலிருந்து மீண்டு, இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தித் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியுள்ளது.