தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று ஜிம்பாப்வேவுடன் மகளிர் 2வது டி20 கிரிக்கெட் போட்டி!
Oct 18, 2026, 07:50 IST
ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், முந்தைய ஆட்டத்தில் அணியின் தொடக்க மற்றும் டாப்-ஆர்டர் பேட்டர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தது சற்று சவாலாக அமைந்தது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் பேட்டிங் வரிசையில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்து, பொறுப்புடன் விளையாடி இந்த வெற்றியோடு தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.
