சாதிக்குமா இந்தியா? இன்று பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்கம்!
Aug 28, 2026, 16:00 IST
பத்தாவது பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் இத்தொடரில் மோதுகின்றன. இதில் இந்தோனேசிய அணி முதன்முறையாகத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடக்க நாளான இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் ஹாங்காங் மற்றும் தாய்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதுவரை 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி தாய்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
