நயன்தாரா அரசியலுக்கு வருவாரா? - இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்!

 
நயன்தாரா விக்னேஷ் சிவன்

உலக உணவு தின விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவனிடம், நடிகை நயன்தாரா 2031-ஆம் ஆண்டு தேர்தலில் அரசியலுக்கு வருவாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

நயன்தாரா தற்போது தான் தாயாகியுள்ளதாகவும், தங்களது முழுமையான கவனம் குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனிப்பதில, வளர்ப்பதிலுமே இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நயன்தாரா

குடும்ப வாழ்க்கையில் கிடைக்கும் மனநிறைவே இப்போதைக்குப் போதுமானது என்றும், இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எந்த திட்டமும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் பேசிய விக்னேஷ் சிவன், பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பவர்கள் குறித்த தனது கடுமையான கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.