மீண்டும் நீட் தேர்வு நடத்தப்படுமா?! உச்சநீதிமன்றத்தில் மனு!

 
ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) எழுதியவா்களில் 1,500-க்கும் அதிகமான தோ்வா்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முன்னதாக பிகார் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, மீண்டும் நீட் தேர்வை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கருணை மதிப்பெண் விவகாரத்தில் மேலும் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்காக உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று ஹரியாணா மாநிலத்திலும் ஒரே தோ்வு மையத்தில் நீட் தோ்வெழுதிய 6 மாணவா்கள் உள்பட நாடு முழுவதும் 67 போ் நீட் தோ்வில் 720-க்கு 720 பெற்றது பெரும் சா்ச்சையானது. 'நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது' என்று சில மாணவா்கள் புகாா் தெரிவித்தனா். 

இதையடுத்து, கருணை மதிப்பெண் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து 4 போ் கொண்ட உயா்நிலைக் குழு அமைத்து விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web