பெட்ரோல், டீசல் விலை குறையுமா? - 10 கோடி பேரல் கச்சா எண்ணெய் விடுவிப்பு!

 
ஓபெக் கச்சா எண்ணெய் க்ரூட் ஆயில்

உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜி7 நாடுகள் தங்களது அவசரகால கையிருப்பில் இருந்து 10 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களைச் சந்தையில் வெளியிட ஒப்புதல் அளித்துள்ளன.

சர்வதேச எரிசக்தி முகமையின் ஒருங்கிணைப்பின் கீழ், அடுத்த 4 மாதங்களுக்கு இந்த அவசரகால கச்சா எண்ணெய் வெளியீட்டு நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்பட உள்ளது.

கச்சா எண்ணெய் ட்ரம்ப்

சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டை உடனடியாகச் சமாளிக்கும் வகையில், முதல் 20 நாட்களுக்குள்ளாகவே கணிசமான அளவு டீசல் சந்தைக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி7 நாடுகளின் இந்த அதிரடி நடவடிக்கையால், உலகளாவிய எரிபொருள் விலையில் தற்காலிகமான சரிவு ஏற்படக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.