பகீர்!! தமிழகத்தில் பரவும் செக்ஸ் கலாசாரம்!! ஆசிரியைக்கு பாலியல் தொல்லை!!

 
பகீர்!! தமிழகத்தில் பரவும் செக்ஸ் கலாசாரம்!! ஆசிரியைக்கு பாலியல் தொல்லை!!

தமிழகத்துக்கு என்ன தான் ஆச்சு? என்பது போல, பள்ளி ஆசிரியர்களின் அத்துமீறல்கள் தற்போது தொடர்ந்து வெளிச்சத்துக்கு வரத் துவங்கியுள்ளன. அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், வி.ஐ.பி. பள்ளிகள், இண்டர்நேஷனல் பள்ளிகள் என்கிற பாகுபாடு எல்லாம் கிடையாது. சமத்துவமாக எல்லா விதமான பள்ளிகளிலுமே சபலிஷ்ட் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி தான்.

தங்களது மகள்களாக பார்க்க வேண்டிய மாணவிகளை, அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்களே அவர்களின் எதிர்காலத்தை சூன்யமாக்கும் கொடுமைக்கு இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை.

பகீர்!! தமிழகத்தில் பரவும் செக்ஸ் கலாசாரம்!! ஆசிரியைக்கு பாலியல் தொல்லை!!

பொள்ளாச்சி சம்பவம் என்று மொத்த இந்தியாவும் அந்த ஆடியோ குரலுக்கு கண்ணீர் உகுத்து கதறிய போது, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பொள்ளாச்சியை மிஞ்சும் வகையில் தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருப்புக்கோட்டை கல்லூரி, பத்மசேஷாத்ரி பள்ளி, சின்மயா பள்ளி, செட்டிநாடு வித்யாஷ்ரமம் என இத்தனை வருஷங்களாக தமிழகத்தின் பெருமைமிகு பள்ளிகள் என்று இவர்கள் தம்மட்டம் அடித்துக் கொண்டது இப்படி கேவலமான ஆசிரியர்களை வைத்துக் கொண்டு தானா என்கிற கேள்வி எழுகிறது.

இந்நிலையில், ராமநாதரபுரம் மாவட்டத்தின் சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் சந்திரன் என்கிற ஆசிரியர், அதே பள்ளியின் உடன் பணியாற்றி வரும் பெண் ஆசிரியைக்கு தொடர்ந்து ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார்.

மேலும் தன்னுடன் உடலுறுவு கொள்ளுமாறு பல முறை ஆசிரியைக்கு அவர் தகவல் அனுப்பியுள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் சந்திரன் மீது புகாரளித்தார்.

பகீர்!! தமிழகத்தில் பரவும் செக்ஸ் கலாசாரம்!! ஆசிரியைக்கு பாலியல் தொல்லை!!

அதன் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் சந்திரனை கைது செய்தனர். அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாணவிகள், ஆசிரியைகள் என பெண்களுக்கு எல்லா ரூபாத்திலும், எல்லா இடத்திலும் தொடர்ந்து பாலியல் தொல்லைகள் இருக்கவே செய்கின்றன. தமிழக அரசு… தன் சாதனைகளை பட்டியலிடுவதில் காட்டும் அக்கறையில், கொஞ்சம் பெண்களைப் பாதுகாப்பதிலும் காட்டினால் தமிழகம் நிஜமாகவே தலைநிமிரும்!

From around the web