கருணைக் காட்டுவாரா முதல்வர்? சென்னையில் 12வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம்!

 
தூய்மை பணியாளர்கள் துப்புரவு போராட்டம்

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் தினக்கூலி தூய்மைப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து 11-வது நாளாகத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூய்மை பணியாளர்கள் துப்புரவு

தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த முழு ஊதியத்தை வழங்க வேண்டும், வார விடுமுறை, மகப்பேறு விடுப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

போராட்டம் கைது தூய்மைப் பணியாளர்கள் தூய்மை

போராட்டத்தின் 11-வது நாளான நேற்று, பெண்கள் கருப்பு சேலை அணிந்தும், ஆண்கள் கருப்பு சட்டை அணிந்தும், வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டும் தங்களது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வித்தியாசமான முறையில் பதிவு செய்தனர்.