விஜய்யின் வேட்புமனு நிராகரிப்பா? தொண்டர்கள் அதிர்ச்சி... பெரம்பூரில் வேட்பாளர் மாற்றம்?!

 
விஜய் வேட்புமனு விஜய் வேட்புமனு

தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ள இந்தச் செய்தி, நடிகர் விஜய்யின் தேர்தல் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. ஒரே வேட்பாளர் தாக்கல் செய்த இரு வேறு வேட்புமனுக்களில் உள்ள தகவல்கள் முரண்பட்டிருப்பது சட்டச் சிக்கலை உருவாக்கியுள்ளது.

விஜய் தாக்கல் செய்துள்ள இரு தொகுதி வேட்புமனுக்களில், பெரம்பூர் தொகுதி மனுவில், தன் மீது எவ்விதக் குற்ற வழக்குகளும் இல்லை என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக நேற்று தாக்கல் செய்யப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதி மனுவில், தன் மீது 2 வழக்குகள் இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய்

மார்ச் 30-ம் தேதி பெரம்பூர் பிரசாரத்தின் போது விதிகு மீறல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கும் முன்பாக 2025 ஆகஸ்ட் மாதத்தில் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

தேர்தல் விதிகளின்படி, ஒரு வேட்பாளர் தனது பிரமாணப் பத்திரத்தில் அனைத்துத் தகவல்களையும் உண்மையாகத் தெரிவிக்க வேண்டும். ஒரு தொகுதியில் 'வழக்கு இல்லை' என்றும், மற்றொரு தொகுதியில் 'வழக்கு உண்டு' என்றும் குறிப்பிட்டிருப்பது, தகவலை மறைத்ததாகக் கருதப்பட வாய்ப்புள்ளது.

தவறான தகவல் அல்லது முரண்பட்ட தகவல்கள் இருந்தால், தேர்தல் நடத்தும் அதிகாரி அந்த வேட்புமனுவை நிராகரிக்கச் சட்டத்தில் இடமுண்டு. இது குறித்து சட்ட வல்லுநர்கள் கூறுகையில், "ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக 4 செட் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். விஜய் பெரம்பூரில் இதுவரை 2 செட் மனுக்கள் மட்டுமே கொடுத்துள்ளார். இன்னும் 2 நாட்கள் (நாளை ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 6) கால அவகாசம் உள்ளது. அதற்குள் பெரம்பூர் தொகுதியில் புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து, அதில் விடுபட்ட வழக்கு விபரங்களைச் சேர்த்தால் இந்தச் சிக்கலிலிருந்து தப்பிக்கலாம்."

தவெக விஜய்

வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான ஏப்ரல் 6-ம் தேதி நெருங்கி வரும் நிலையில், விஜய்யின் இந்தச் சிறிய கவனக்குறைவு பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்திவிடுமோ எனத் தவெக தொண்டர்கள் கவலையில் உள்ளனர். இருப்பினும், கட்சித் தரப்பில் இந்தத் தவறு சரி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு மாற்றாக, மாற்று வேட்பாளரையும் தவெக பதிவு செய்துள்ளதால், அதற்கு அவசியம் ஏற்படாமல், இந்த தவறை சரி செய்யும் முயற்சியில் தவெக தலைமை நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால், திங்கட்கிழமை கூடுதலாக பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.