விஜயுடன் இணைந்து தமிழக வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம் - பிரதமர் மோடி பெருமிதம்!

 
விஜய் மோடி  விஜய்மோடி

சென்னைக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனத் தெரிவித்தார்.

புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் நவராத்திரி தொடக்க விழாவில் கலந்துகொள்வது பெருமையளிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஜலகண்டேஸ்வரரின் நல்லாசியுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர்களுடன் பணியாற்றிய அனுபவத்தைக் குறிப்பிட்ட அவர், தற்போதைய முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம் என்று உறுதியளித்தார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி, தொழில் மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்துவதுடன், மாநிலம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார். மேலும், தமிழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தொடர்ந்து செய்யும் என்றும் உறுதியளித்தார்.

கப்பல் கட்டுமானத்தில் தமிழ்நாட்டிற்குச் சரித்திரம் வாய்ந்த பங்கு உள்ளதாகப் புகழாரம் சூட்டிய அவர், சென்னை மீன்பிடி துறைமுக மேம்பாட்டிற்குக் மத்திய அரசு உதவி வருவதாகவும், தூத்துக்குடி துறைமுகத்தை ரூ.17,000 கோடியில் நவீனமயமாக்கி விரிவாக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.