“சாதி பார்த்துதான் ரத்தம் எடுப்பீங்களா?” அரசு கல்லூரியில் ரத்த தான முகாமில் மாணவர்கள் ஆவேசம்!

 
சாதி ரத்ததானம்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாத்தில், படிவத்தில் சாதி விவரம் கேட்கப்பட்டதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உதகை அரசு கலைக்கல்லூரியில் சுகாதாரத்துறை மற்றும் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மேரா யுவ பாரத் அமைப்பு இணைந்து ரத்த தான முகாமை நடத்தின. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

ரத்தம் ரத்த வகை லேப்

முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவுப் படிவத்தில் பெயர், வயது, படிப்பு மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றுடன் சாதி விவரமும் கட்டாயமாகக் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவத் தேவைகளுக்காகச் சேகரிக்கப்படும் ரத்த தானத்தில் சாதியைக் குறிப்பிடுவதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள், “சாதி பார்த்துதான் ரத்தம் எடுப்பீர்களா?” என்று அதிகாரிகளிடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.