'நவபஞ்ச ராஜயோக’த்தால்... இந்த 3 ராசிகாரர்களுக்குப் பண மழையும், பதவி உயர்வும் நிச்சயம்!

 
ராகு புதன் ராகு புதன்

ஏப்ரல் மாதம் 3ம் தேதி, புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனும், மங்கலங்களை அள்ளித் தரும் தேவர்களின் குருவான வியாழனும் (குரு) விண்வெளியில் ஒருவருக்கொருவர் 120 டிகிரி இடைவெளியில் (5 மற்றும் 9-ம் வீடுகளில்) அமைகின்றனர். இந்த அபூர்வ நிலையை ஜோதிட சாஸ்திரம் 'நவபஞ்ச ராஜயோகம்' என்று அழைக்கிறது. இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு பணமழையும், அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். 

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் ஒன்பதாம் மற்றும் ஐந்தாம் வீடுகளில் உருவாவதால், 'தொட்டதெல்லாம் பொன்னாகும்' காலம் இது. எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். பல வழிகளில் வருமானம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நீண்ட தூரப் பயணங்கள் லாபகரமாக அமையும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

புதன்

கடக ராசிக்கு 8 மற்றும் 12-ம் வீடுகளில் இந்த கிரக நிலைகள் அமைவதால், வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் இருப்பவர்களுக்குப் பெரிய வெற்றி கிடைக்கும். வேலையில்லாமல் தவிப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை தேடி வரும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். புனித யாத்திரைகள் செல்லும் யோகம் உண்டாகும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள்.

குரு குருபெயர்ச்சி

மீன ராசிக்காரர்களுக்கு 4 மற்றும் 12-ம் வீடுகளில் இந்த யோகம் ஏற்படுவதால், அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் கூடி வரும். நிலம், வீடு அல்லது புதிய வாகனம் வாங்குவதற்கு இதுவே மிகச் சிறந்த காலம். குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும், ஆசியும் உங்களுக்குக் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். பணியிடத்தில் உங்களது திறமைக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன், சமூகத்தில் கௌரவம் உயரும்.