“பணம் செலவிடாமல் தவெக வெற்றி பெற்றுள்ளது”- வைகோ பேட்டி!

 
வைகோ

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகள் குறித்துப் பல முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

எதிர்க்கட்சிகள் தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயன்ற போதிலும், அவை அனைத்தையும் மீறி ஆளுங்கட்சியான தவெக பெரிய அளவில் பணம் செலவிடாமல் நேர்மையான முறையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வைகோ

முதலமைச்சர் விஜய் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுகவினர் தொடர்ந்து அவதூறான விமர்சனங்களையும் பரப்புரைகளையும் முன்னெடுத்து வருவதாக வைகோ குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற்றதால் தான் தவெக மாபெரும் வெற்றியைப் பெற்று விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்கக் காரணமாக அமைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.