அதிர்ச்சி... பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

 
தடம் புரண்ட ரயில்
 

மத்தியப் பிரதேச மாநிலம் இடார்சி ரயில் நிலையத்தில் ராணி கம்லாபதி-சஹர்சா பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் நேற்று தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த உயிர்சேதங்களும் ஏற்படவில்லை. நேற்று ஆகஸ்ட் 12ம் தேதி மாலை மத்தியப் பிரதேசத்தில் உள்ள இடார்சி ரயில்வே சந்திப்பில் பயணிகள் ரயில் நுழையும் போது திடீரென ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தடம் புரண்ட ரயில்

ராணி கம்லாபதி-சஹர்சா பயணிகள் ரயிலின் (01663) நான்காவது மற்றும் ஐந்தாவது பெட்டிகள் நேற்று மாலை 6.10 மணிக்கு இடார்சியின் பிளாட்பாரம் எண் . 2ல் வந்துக் கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளனது.ரயில் நிலையத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்ததால், ரயில் பெரும் வேகத்தில் வரவில்லை என்றும், இதனால் இந்த விபத்தில் உயிர்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்றும்  அதிகாரிகள் தெரிவித்தனர். 

தடம் புரண்ட ரயில்

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீண்டும் தண்டவாளப் பாதையில் வைக்கப்பட்டு, இரவு 9.06 மணிக்கு ரயில் நடைமேடையில் இருந்து நகர்ந்தது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் 3 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அனைத்து ரயில்களும் தாமதமாக சென்று சேர்ந்தன. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ ஹெல்ப்லைன் எண்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த திடீர் விபத்து மற்றும் தாமதம் காரணமாக பயணிகளுக்கு உணவும் வழங்கப்பட்டதாக

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா