வீட்டிற்குள் புகுந்த ஓநாய் ... அலறி அடித்து ஓடிய குடும்பத்தினர்... பரபரப்பு வீடியோ!
கனடாவின் டொராண்டோவில் உள்ள கிறிஸ்டி பிட்ஸ் பகுதியில், சில நாட்களுக்கு முன்பு ஆலிஸ் கென்ட் என்பவரின் வீட்டிற்குள் ஓநாய் குட்டி ஒன்று புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஊழியர், படுக்கையில் இருந்த விலங்கைக் கண்டு முதலில் நரி என நினைத்து வீட்டின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், அந்த விலங்கைப் பரிசோதித்தபோது அது ஓநாய் குட்டி என்பதும், அதன் தோலில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறையினர் அந்த ஓநாய் குட்டியைப் பத்திரமாக மீட்டு, உரிய சிகிச்சை அளித்த பிறகு பாதுகாப்பாக விடுவித்தனர்.
வனவிலங்குகளுக்குப் பொதுமக்கள் உணவு அளிக்கும் பழக்கமே அவை மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது என விலங்கு நல ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
