பெண்ணைக் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை... 5 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

 
கூட்டு பாலியல் கூட்டு பாலியல்

சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு அரங்கேறிய கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை வழக்கில், கைதான 5 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு, சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், மர்ம நபர்கள் சிலரால் கட்டாயப்படுத்தி கடத்திச் செல்லப்பட்டார். கடத்தப்பட்ட பெண்ணிடமிருந்து கும்பல், தங்க நகைகளைப் பறித்துக் கொண்டதுடன், மிகக் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கியது.

பாலியல்

இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சூர்யா, தினேஷ், கணேஷ், சுபாஷ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்குரிய ஆதாரங்களையும் சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

பலாத்காரம் கூட்டு பாலியல் சிறுமி பாலியல்

வழக்கின் அனைத்துக் கட்ட விசாரணைகளும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சூர்யா, தினேஷ், கணேஷ், சுபாஷ், சந்தோஷ்குமார் ஆகிய 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, அவர்கள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பினை வழங்கியுள்ளார்.