திருவள்ளூரில் 15 சவரன் நகைக்காக பெண் அடித்துக் கொலை - பூட்டிய வீட்டிற்குள் சடலம் மீட்பு!

 
நகைக்காக கொலை

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொடூரமான முறையில் கொலை செய்து, அவரிடமிருந்த 15 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மக் கும்பலை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் வனஜா. இவர் தனது வீட்டில் இட்லி மாவு தயாரித்து அக்கம் பக்கத்தினருக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இன்று வீட்டில் வனஜா தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே புகுந்த மர்மக் கும்பல் ஒன்று, அவரிடம் இருந்த நகைகளைப் பறிக்க முயன்றுள்ளது. அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கவே, அக்கும்பல் வனஜாவைக் கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்துள்ளது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

வனஜா உயிரிழந்ததை உறுதி செய்துகொண்ட அந்தக் கொள்ளைக் கும்பல், அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டில் வைத்திருந்த சுமார் 15 சவரன் தங்க நகைகளைச் சூறையாடியுள்ளது. பின்னர், அக்கம் பக்கத்தினருக்கு எவ்வித சந்தேகமும் வராதவாறு, வனஜாவின் உடலை வீட்டிற்குள்ளேயே போட்டுவிட்டு, வீட்டின் வெளிப்பக்கக் கதவைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது. நீண்ட நேரமாகியும் வனஜாவின் வீடு பூட்டப்பட்டுக் கிடந்ததாலும், அவரிடமிருந்து எவ்வித பதிலும் வராததாலும் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் கதவைத் திறந்து பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழவேற்காடு காவல் துறையினர், வனஜாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விபத்து நடந்த இடத்தில் முக்கியத் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

இக்கொடூரக் கொலையில் ஈடுபட்டுத் தப்பியோடிய மர்மக் கும்பலைப் பிடிப்பதற்காகக் காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர வலைவீசித் தேடப்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், நகைக்காகப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழவேற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.