சொத்துத் தகராறில் பெண் அடித்துக் கொலை.. தங்கைக்குப் போலீசார் வலைவீச்சு - ஸ்ரீமுஷ்ணம் அருகே 3 பேர் கைது!

 
கொலை

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே சொத்துத் தகராறு காரணமாகத் தங்கையும் அவரது மகன்களும் சேர்ந்து இரும்புக் கம்பியால் தாக்கியதில், லட்சுமி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள முக்கியக் குற்றவாளியான வேம்புவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கும் இவரது தங்கை வேம்பு என்பவருக்கும் இடையே குடும்பச் சொத்துகளைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக நீண்ட நாட்களாகத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

சொத்துப் பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வேம்பு, அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து லட்சுமியைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மோதலின்போது வேம்பு மற்றும் அவரது மகன்கள் கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் லட்சுமியின் தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகத் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

சொத்துக்காக உடன்பிறந்த சகோதரியையே இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொலைச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார், உயிரிழந்த லட்சுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்த கொலை வழக்குத் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சம்பவம் நடந்ததும் தப்பியோடித் தலைமறைவாகியுள்ள வேம்புவை பிடிக்கப் போலீசார் தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.