தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி அடித்துக் கொலை... காது, மூக்கு அறுத்து நகைகள் கொள்ளை... பரபரப்பு!

 
கடலூர்

 

கடலூர் அருகே உள்ள திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த கலா என்ற மூதாட்டி நகைக்காகக் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வசித்து வந்த கலா என்ற மூதாட்டி வழக்கம் போல் நேற்று இரவில் தனது வீட்டிற்கு வெளியே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

 ஆம்புலன்ஸ்

மூதாட்டி அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடிக்கும் நோக்கில் மர்ம நபர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். தடுத்து நிறுத்த முயன்றிருக்கக் கூடும் என்பதால், மூதாட்டியின் காது மற்றும் மூக்கு பகுதிகள் அறுக்கப்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

அவர் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.காலை நேரத்தில் மூதாட்டி உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.