"உடலுறவுக்கு வெச்சுக்கிட்டா தான் மாவட்ட தலைவர் பதவி” - பாஜக பெண் நிர்வாகி 'பகீர்' புகார்!

 
பாஜக பெண் பாஜக பெண்

உத்தரப் பிரதேச மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், அரசியல் களத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது. பாஜக முன்னாள் நிர்வாகி தீபாலி திவாரி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அந்தப் புகாரின் முக்கிய விவரங்கள் அதிர்ச்சியையும், உபி அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

தீபாலி திவாரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பாஜக-வின் மாவட்டத் தலைவராக உள்ள மோகன்லால் என்பவர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் பதவி வேண்டுமென்றால், தன்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என மோகன்லால் வற்புறுத்தியதாகத் தீபாலி திவாரி தெரிவித்துள்ளார்.

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

இதற்கு இணங்க மறுத்தபோது, தீபாலி திவாரியின் கணவர் மீது போலியான பாலியல் வன்கொடுமை வழக்கைப் பதிவு செய்து அவரைச் சிறைக்கு அனுப்புவேன் என்று மோகன்லால் மிரட்டியதாகவும் அந்த வீடியோவில் அவர் கதறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, பாஜக மேலிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் மாவட்டத் தலைவர் மோகன்லால் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

பாஜக

அரசியல் அமைப்புகளில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருப்பவர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக எழும் புகார்கள், பொதுவாழ்விற்கு வரும் பெண்களுக்கு ஒருவித அச்சத்தை உருவாக்குகின்றன.

அனைத்து அரசியல் கட்சிகளிலும் இத்தகைய பாலியல் புகார்களை விசாரிக்கத் தனிக்குழுக்கள் முறையாகச் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.