8 வயது சிறுவனைப் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் மீது வழக்கு... பொய் குற்றச்சாட்டு எனக் கூறி தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

 
காதல் காதலர்கள் இளம்பெண் லிப்ட் தனிமை பாலியல்

8 வயது சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 21 வயது பெண் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது எனத் தெரிவித்து, அவ்வழக்கை எர்ணாகுளம் மூவாட்டுப்புழா போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், 8 வயது சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறி அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்புகார் குறித்துக் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாகப் பழிவாங்கும் நோக்கில் மட்டுமே இந்தப் போலி புகார் அளிக்கப்பட்டது அம்பலமானது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

வழக்கை விசாரித்த மூவாட்டுப்புழா போக்சோ நீதிமன்றம், புகாரில் இருந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி வழக்கைத் தள்ளுபடி செய்தது. பாலியல் துன்புறுத்தல் நடந்ததாகக் குறிப்பிடப்பட்ட நாட்களில், அந்தப் பெண் புகார்தாரர்களின் வீட்டிற்குச் செல்லவே இல்லை என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. மேலும், சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்ட காலத்தில் புகார்தாரர்கள் குறிப்பிட்ட அந்த முகவரியிலுள்ள வீட்டில் வசிக்கவே இல்லை என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. முற்றிலும் புனையப்பட்ட வழக்கில் அந்தப் பெண் நிரபராதி எனத் தீர்ப்பளித்த போக்சோ நீதிமன்றம், வழக்கை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.