புல் அறுக்கையில் விஷவண்டு கடித்துப் பெண் பலி.. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

 
பலி

வயல்வெளியில் புல் அறுக்கச் சென்றபோது விஷவண்டு கடித்ததில் மயங்கி விழுந்த 50 வயதுப் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (50), மதுக்கூர் ராமாம்பாள்புரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வயல்வெளிக்குப் புல் அறுக்கச் சென்றபோது விஷவண்டு கடித்ததில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

ராஜேஸ்வரி மயங்கி விழுந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டுச் சிகிச்சைக்காகப் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.