அறுவடை இயந்திரத்தில் சிக்கிப் பெண் பலி - ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை!

 
அறுவடை இயந்திரம் அறுவடை இயந்திரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில், விளைவிக்கப்பட்ட மக்காச்சோள மூட்டைகளைக் கொட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணகி என்ற பெண் தொழிலாளி, எதிர்பாராதவிதமாக இயங்கிக் கொண்டிருந்த அறுவடை இயந்திரத்திற்குள் சிக்கிச் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கித் துடிதுடித்துப் பலியானார்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதிகளில் மக்காச்சோள அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சங்கராபுரம் பகுதியில் உள்ள ஒரு விவசாயக் களத்தில் கண்ணகி என்ற பெண் கூலித் தொழிலாளி இன்று வழக்கம் போலப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோள மணிகள் அடங்கிய மூட்டைகளை இயந்திரத்தில் கொட்டுவதற்காக அவர் அருகில் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது ஆடை அல்லது உடல் பகுதி அசுர வேகத்தில் சுழன்று கொண்டிருந்த அறுவடை இயந்திரத்தின் பற்களுக்குள் சிக்கிக் கொண்டது.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் இயந்திரம் அவரை உள்ளே இழுத்ததில், கடுமையான காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்த சக தொழிலாளர்கள் அலறியடித்து ஓடிவந்து இயந்திரத்தை நிறுத்துவதற்குள் அனைத்தும் முடிந்து போனது.  ஏழைப் பெண் தொழிலாளி விபத்தில் சிக்கி உயிரிழந்த தகவல் அறிந்து, விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி எம்பி ரவிக்குமார் அரசுக்கு முக்கியக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி கண்ணகியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான பின்னணியைக் கொண்டது என்பதால் தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட வேண்டும் என எம்பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.