கனமழையால் சுவர் இடிந்து விழுந்து பெண்மணி உயிரிழப்பு - விழுப்புரத்தில் துயரம்!

 
சுவர் இடிந்து விழுந்து

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கனமழை காரணமாகக் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திண்டிவனம் அடுத்துள்ள மோழியனூர் கிராமத்தில் நேற்று இரவில் பலத்த கனமழை பெய்தது. இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த பாஞ்சாலி (60) என்பவரின் குடிசை வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 

பள்ளி மானவி தற்கொலை

இடிபாடுகளுக்குள் சிக்கிய பாஞ்சாலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.