ஆடைகளை வாடகைக்கு விட்டு மாதம் ரூ.5 லட்சம் வருமானம்: அசத்தும் பெண்!
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசிக்கும் 35 வயது முன்னாள் நிதித்துறை அதிகாரி வென் சாங், தனது ஆடைகளை ஆன்லைனில் வாடகைக்கு விடுவதன் மூலம் மாதம் சுமார் ரூ.4.6 லட்சம் ($5,000) வருமானம் ஈட்டி வருகிறார். நிதித் துறையில் 7 ஆண்டுகள் பணியாற்றிய அவர், பணி அழுத்தம் மற்றும் சலிப்பு காரணமாக அந்த வேலையை விட்டு விலகி பாஸ்டனுக்குச் சென்றுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் ஆடை வாடகைத் தொழில் குறித்த கட்டுரையைப் படித்த பிறகு, ஆன்லைன் வாடகைச் செயலியில் தன் அலமாரியில் இருந்த ஆடைகளைப் பட்டியலிடத் தொடங்கியுள்ளார். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்குப் பிடித்த ஆடைகளின் பல நகல்களை வாங்கித் தனது சேகரிப்பை விரிவுபடுத்தியுள்ளார்.
தற்போது சுமார் 460 ஆடைகளைக் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விட்டு வரும் வென் சாங், பாஸ்டனில் பிரத்யேக ஷோரூம் தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.
