கோவையில் அதிர்ச்சி: பாதாள சாக்கடை குழியில் பைக்குடன் விழுந்த பெண்!

 
பாதாள சாக்கடை

கோவை மாநகரில் பாதாள சாக்கடை பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குழியில் இருசக்கர வாகனத்துடன் பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகப் பாதாள சாக்கடை பணிகளுக்காகத் திறந்திருந்த பெரிய குழிக்குள் பைக்குடன் பரிதாபமாக விழுந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் விரைந்து வந்த மீட்புப் பணியாளர்கள், ஜேசிபி இயந்திரத்தின் உதவியைக் கொண்டு குழியில் சிக்கிய பெண்ணையும் அவரது இருசக்கர வாகனத்தையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களில் உரிய எச்சட்டப் பலகைகளும் தடுப்புகளும் அமைக்கப்படுவதில்லை எனவும், இது போன்ற அலட்சியத்தால் பொதுமக்களுக்குப் பெரும் ஆபத்து ஏற்படுவதால் நிர்வாகம் உரிய பாதுகாப்புப் பணிகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.