வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் வாங்கிக்கொண்டு இளம்பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்!

 
விபச்சாரம் பாலியல்

ஐரோப்பிய நாட்டில் சூப்பர் மார்க்கெட் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் பணத்தைப் பறித்துக் கொண்டு அவரைப் போர்ச்சுகல் நாட்டில் விபச்சாரத்தில் தள்ளிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

நாக்பூரைச் சேர்ந்த 28 வயது இளம்பெண், இன்ஸ்டாகிராமில் 'வி மைக்ரேட்' என்ற ஏஜென்சியின் விளம்பரத்தைப் பார்த்து புனே நகரில் உள்ள அவர்களின் அலுவலகத்தை அணுகியுள்ளார். ஐரோப்பாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரப் பணி, மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளம், வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை மற்றும் 3 ஆண்டுகள் வேலைக்கான விசா என ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர். காசாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி விசா மற்றும் இதர ஆவணக் கட்டணங்கள் எனப் பல தவணைகளாக அந்தப் பெண்ணிடம் ரூ.11 லட்சம் வசூலித்துள்ளனர்.

அழகிகள் விபச்சாரம் உல்லாசம் மசாஜ் பாலியல்

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் கடந்த மே 21 அன்று மும்பையிலிருந்து புறப்பட்டு அபுதாபி, மேட்ரிட் வழியாகப் போர்ச்சுகல் நாட்டை அடைந்துள்ளார். போர்ச்சுகலில் வம்சி, சைதன்யா மற்றும் ஹிம்மத் சிங் ஆகிய நபர்கள் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று அவரது பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்து, இரண்டு நாட்கள் ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

பின்னர் அந்தப் பெண் ஒரு பீர் கடை உரிமையாளரின் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஏற்கனவே தங்க வைக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் மற்றும் அரியானாவைச் சேர்ந்த பெண்கள், தாங்களும் இதேபோல் நல்ல வேலை என ஏமாற்றப்பட்டு இங்குச் சட்டவிரோதமான தேவைகளுக்காகத் தள்ளப்பட்டிருப்பதைக் கூறி அதிர்ச்சியளித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்களும் பெண்களும் முகவர்களின் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனப் போலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.