டாஸ்மாக் கடையையே வீட்டில் மறைத்து வைத்திருந்த பெண்.. 3 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்!

 
குமுதவள்ளி

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பண விநியோகம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் பல குழுக்களாகப் பணியாற்றி வருகின்றனர். ஆங்காங்கே இக்குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆளக்குடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புதுச்சேரி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் விரைந்து வந்து கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது குமுதவள்ளி வீட்டின் பின்புறம் சாக்கு மூட்டை மற்றும் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் 110 லிட்டர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த குமுதவள்ளி என்ற பெண்ணை பிடித்து சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, பெண்ணிடம் இருந்த மதுபாட்டில்கள் தேர்தலுக்காக கடத்தப்பட்டதா? அல்லது எதற்காக கடத்தப்பட்டார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் 3 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web