நைட் டியூட்டி முடித்து வீடு திரும்பிய பெண் இன்ஸ்பெக்டர்.. காரில் கட்டு கட்டாக பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..!

 
 புளியரை பெண் போலீஸ் கைது
தமிழ்நாடு-கேரள எல்லையில் புளியரை சோதனைச்சாவடியில் பணி முடித்துச் சென்ற போக்குவரத்து பெண் இன்ஸ்பெக்டர் காரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.2.76 லட்சம் பறிமுதல் செய்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ளது புளியரை.. இது தமிழக - கேரளா எல்லையில் உள்ள பகுதியாகும்.. இரு மாநில எல்லை பகுதி என்பதால், தினமும் ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன. எனவே, புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சோதனைச்சாவடியில், லாரி டிரைவர்களிடம் லஞ்சம் வாங்குவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்திருக்கிறது.. அதனால், தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மப்ட்டியில் கிளம்பி வந்துவிட்டனர். நேற்றுமுன்தினம், விடிகாலை முதலே, புளியரை செக்போஸ்ட் அருகிலேயே மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

புளியரை சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகளை கால்நடைத்துறை  இயக்குனர் ஆய்வு | Avian flu prevention work at Puliyarai check post  inspected by director of animal husbandry

அன்றைய தினம், மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி என்பவர் நைட் டியூட்டியில் ஈடுபட்டிருந்தார்.. ஆனால், அவருக்குகூட போலீசார் இப்படி கண்காணிப்பது தெரியாது.. இந்நிலையில், மறுநாள் காலை டியூட்டியை முடித்துக்கொண்டு, 8.30 மணிக்கு, தன்னுடைய கணவரான ஷாட்சன் என்பவருடன் வீட்டிற்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, கற்குடி-தவணைவிலக்கு பகுதியில், திடீரென அந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.. பிறகு, காருக்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையும் மேற்கொண்டனர்.. பிரேமா ஞானகுமாரி, கையில் வைத்திருந்த ஹேண்ட்பேக்கையும், இன்ஸ்பெக்டர் வாங்கி சோதனை செய்தார்.. அதில், கட்டுக்கட்டாக பணத்தை இருப்பதை பார்த்து அதிர்ந்தார்.

மொத்தம் ரூ.2,76,400 பணம் இருந்திருக்கிறது. பிறகு, பிரேமா ஞானகுமாரியை, மறுபடியும் சோதனை சாவடிக்கு அழைத்து சென்று விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் அது, கனரக லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் என ஏகப்பட்ட வாகன ஓட்டிகளிடம் லஞ்சமாக வாங்கிய பணம் என்பது தெரியவந்தது.,. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், பெண் அதிகாரி, பிரேமா ஞானகுமாரியையும் கைது செய்துள்ளனர்.
பெண் மோட்டார் வாகன ஆய்வாளர், இப்படி கையும் களவுமாக இரண்டரை லட்ச ரூபாய் பணத்துடன் சிக்கியது, அதிர்ச்சியை தென்காசி மாவட்டத்தில், தந்து வருகிறது. கைதான பிரேமா ஞான குமாரிக்கு 58 வயதாகிறது.. கடந்த 3 நாட்களாகவே, இந்த செக்போஸ்ட்டில் இருந்திருக்கிறார் பிரேமா ஞானகுமார். அப்படியானால், அது 3 நாள் வசூலான லஞ்சப்பணமா? அல்லது வேறு ஏதாவது பணம் வைத்திருந்தாரா? என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.
சென்னையை அலறவிட்ட ரேகா.. மிட்நைட்டில் அசிங்கமா போச்சு.. குலுங்கிய கொளத்தூர்.. பாவம் அந்த பெண் போலீஸ்
இதையடுத்து, பெண் அதிகாரியின் வீட்டில் ரெய்டு நடத்தப்படுகிறது.. இன்று 2-வது நாளாக பெருமாள்புரத்தில் கிருஷ்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி சோதனை: டிஎஸ்பி பால்சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வீட்டில் உள்ள நகை, பணம் மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வருகிறார்கள்.. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வட்டாரங்கள் சொல்லியுள்ளதால், விவகாரம் பெரிதாகும் என்றே தெரிகிறது.

From around the web