ஓடும் ரயிலிலிருந்து குதித்த பெண்... நூலிழையில் காப்பாற்றிய ரயில்வே போலீசார்!

 
ரயில் சிசிடிவி

கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விடப்பட்ட தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண்ணின் உயிரை ரயில்வே போலீஸ் அதிகாரி விரைந்து செயல்பட்டு கண நேரத்தில் காப்பாற்றினர்.

அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த நவம்பர் 23 சனிக்கிழமையன்று, அந்தப் பெண் கான்பூரில் இருந்து டெல்லிக்கு ரயிலில் பயணித்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்மணி ஷ்ரம் சக்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியிருக்கிறார். ஆனால் அந்த பெண்ணின் குழந்தைகள் ரயிலில் ஏற முடியாமல் பின்தங்கிவிட்டனர். ரயில் நகர ஆரம்பித்ததும், கோச்சின் கதவுக்கு வெளியே சாய்ந்தபடி தன் குழந்தைகளை அழைத்தார்.

அப்போது அந்த பெண் ரயிலின் பெட்டியில் இருந்து கீழே குதித்து, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியில் சிக்கி, ஓடும் ரயிலில் இழுத்துச் செல்லப்பட்டார். உடனே அவளை ஜிஆர்பி சப்-இன்ஸ்பெக்டர் ஷிவ் சாகர் சுக்லா மற்றும் கான்ஸ்டபிள் அனூப் குமார் பிரஜாபதி ஆகியோர் உடனடியாக செயல்பட்டு மீட்டனர்.

இந்த சம்பவத்தின் 11 வினாடி வீடியோவில், அந்த பெண் ரயிலில் இருந்து குதித்தவுடன் இரண்டு போலீசார் அவரை காப்பாற்றுவதைக் காட்டுகிறது. அவர் விழுந்த சில நொடிகளில் GRP பணியாளர்கள் அவரைப் பிடித்தனர்.

றயில்

இச்சம்பவம் குறித்து எஸ்ஐ சுக்லா கூறும்போது, ​​"டில்லி செல்லும் ரயிலில் பெண்ணுடன் மூன்று பெண்களும், ஒரு குழந்தையும் பயணம் செய்தனர். பயணத்தின் போது, ​​ரயில் நகரத் தொடங்கியதால், அந்த பெண்ணின் குழந்தைகள் பிளாட்பாரத்தில் விடப்பட்டதால் பெண் அலறினார். இது என் கவனத்தை ஈர்த்தது. அவர் ஓடும் ரயிலின் வாசலில் நிற்பதை நான் கவனித்தேன். அதனால் நான் அவருடன் பேச முயற்சித்தேன்.

"ரயில் இயக்கத்தில் இருந்ததால், அவள் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியில் நழுவத் தொடங்கினார். அந்த நேரத்தில், நான் அவரை வேகமாகப் பிடித்தேன். என் குழு உறுப்பினர் அவரை வெளியே இழுத்தார். மீட்பு பணியின் போது, ​​நாங்கள் ஓடும் ரயிலின் பக்கமாக ஓடினோம்" என்று சுக்லா கூறினார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web