கர்நாடகத்தில் அதிர்ச்சி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!

 
கள்ளக்காதல்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்ற மனைதியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி: ஹாசன் மாவட்டம் அர்சிகெரே தாலுக்கா பசவனஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதான மோகன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்குத் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். மோகன் குத்தகை நிலத்தில் இஞ்சி விவசாயம் செய்து வந்தார்.

ஜெயலட்சுமிக்கும் தனஞ்சயமூர்த்தி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை மோகன் கண்டித்ததால், தனது கணவனைத் தீர்த்துக்கட்ட ஜெயலட்சுமி திட்டமிட்டுள்ளார்.

கள்ளக்காதல்

மோகனைக் கொலை செய்ய ரூ.1 லட்சம் தருவதாகத் தனஞ்சயமூர்த்தி, ஜெகதீஷ் மற்றும் புட்டராஜு ஆகியோரிடம் ஜெயலட்சுமி பேரம் பேசியுள்ளார். செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், செப்டம்பர் 4-ஆம் தேதி இரவு இரண்டாவது முயற்சி வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.

வயலில் இஞ்சிப் பயிருக்கு நீர்ப்பாசனம் செய்யச் சென்ற மோகனின் இருப்பிடத்தை மனைவி ஜெயலட்சுமி ரகசியமாகத் தனஞ்சயமூர்த்திக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். அதன்பின்னர், ஜெகதீஷ் மோகனுடன் பேசிக் கொண்டிருக்க, பின்னால் வந்த தனஞ்சயமூர்த்தி இரும்புக் கம்பியால் தாக்கி மோகனைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கள்ளக்காதல்

கொலைக்குப் பிறகு தனக்கு எதுவும் தெரியாது என ஜெயலட்சுமி நாடகமாடியுள்ளார். இருப்பினும், செல்போன் அழைப்புப் பதிவுகள் மற்றும் காவல்துறையின் தீவிர விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மனைவி ஜெயலட்சுமி மற்றும் உடந்தையாக இருந்த தனஞ்சயமூர்த்தி, ஜெகதீஷ், புட்டராஜு ஆகிய 4 பேரைக் காண்ட்ஸி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.