சட்டசபைக்கு ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்த தவெக பெண் எம்.எல்.ஏ.க்கள்... பிரேமலதாவும் சேர்ட்ந்துக்கிட்டாரே?!
தமிழக சட்டசபையின் நேற்றைய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. காவல்துறைக் துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையை முதலமைச்சர் விஜய் வழங்குவதாகத் தெரிவித்திருந்த நிலையில், அவர் தனது பதிலுரையை மிகவும் அனல் பறக்கும் வகையில் அளித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவாதங்கள் நடைபெற்றன.
நேற்று நடைபெற்ற சட்டசபை நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் ஒரே மாதிரியான இளஞ்சிவப்பு நிறத்தில் சேலை அணிந்து வந்து சட்டசபையை வருகையால் அலங்கரித்தனர்.
த.வெ.க. கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான கீர்த்தனா, கமலி, ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் இந்த ஒருங்கிணைந்த தோற்றத்தில் கலந்துகொண்டனர். இவர்களில் தாஹிரா எம்.எல்.ஏ. மட்டும் குறிப்பிட்ட நிற சேலை அணிந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சட்டசபை நிகழ்வின் போது த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி தன்னுடைய குழந்தையுடன் சென்று முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, முதலமைச்சர் விஜய் அந்தக் குழந்தையின் உடையில் 'பிரியமுடன் விஜய்' என்று பச்சை நிற மையில் தனது கையெழுத்தைப் போட்டு மகிழ்வித்தார்.
