கொடூரம்: அடிக்கடி உல்லாசத்திற்கு அழைத்ததால் பெண் கொலை!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பராணி என்ற பெண்ணிற்கும் மகேந்திரன் என்பவருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாகக் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. கணவரை இழந்த புஷ்பராணி அவ்வப்போது மகேந்திரனுடன் தனிமையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் புஷ்பராணி அடிக்கடி மகேந்திரனை உல்லாசத்திற்கு வருமாறு வற்புறுத்தி அழைத்ததால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வற்புறுத்தி வந்த புஷ்பராணி ஒரு கட்டத்தில் தனது விருப்பத்திற்கு இணங்காவிட்டால் இந்த விவகாரத்தை மகேந்திரனின் மனைவியிடம் கூறிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும் என மகேந்திரன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த ஆத்திரத்தில் மகேந்திரன் புஷ்பராணியை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி மகேந்திரனை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
