உடல்நலக்குறைவால் தாயகம் திரும்பிய பெண்.. நடுவானில் பரிதாபமாக உயிரிழந்த பெண்.. கதறும் சிறுமி!
வெளியூர் வேலைக்கு சென்ற பெண் உடல் நலக்குறைவால் வீடு திரும்பும் போது நடுவானில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராசாத்தி, மலேசியாவில் வீட்டு வேலை பார்த்து வந்தார். அங்கு அவருக்கு திடீரென நுரையீரல் தொற்று ஏற்பட்டது.
இவர் நேற்று மலேசிய விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ராசாத்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விமானத்தின் இருக்கையில் அமர்ந்த படியே உயிரிழந்தார்.
தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தற்போது தாயும் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதால், ஆதரவின்றி தவிக்கும் 4ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!